Everything happens because of God’s will BY SAI SRINIVASAN on JUNE 25, 2017 • ( 3 ) Rate This Jaya Jaya Sankara Hara Hara Sankara – I’m sure we all remember this touching incident from Shri Salem Anusham Ravi Mama. Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Smt. Sharadha Srinivasan for the translation and Shri Mani for the share. “கஷ்டம் கஷ்டம்” என்று நாம் படுவதாக நினைத்துக் கொண்டால், அந்த கஷ்டத்துக்கு கொண்டாட்டம்! அம்பத்தூரில் ஒரு கம்பெனியில் வேலை செய்தவருக்கு ஏகப்பட்ட ப்ரச்சனைகள்! நோயாளி மனைவி, தறுதலைப் பிள்ளைகள். அவருடைய நண்பர் பெரியவாளுடைய பக்தர். “நீ உனக்குள்ளேயே நொந்துண்டு இருக்கறதை விட, பேசாம காஞ்சிபுரம் போ! எங்க பெரியவாளை ஒரே ஒரு தடவை தர்சனம் பண்ணு. ஒன்னோட ஸ்ரமங்கள் காத்தோட காத்தாப் போய்டும்!…” என்று சொன்னதை மனஸில் வாங்கிக் கொண்டு காஞ்சிபுரம் வந்தார். “ஒலகத்தோட மூலை முடுக்குலேர்ந்தெல்லாம் பெரிய பெரிய ராஜாக்கள், ஜனாதிபதிகள்லேர்ந்து, சாதாரண குட...